24 வருடங்களில் நடக்கும் கதையாக உருவாகும் ‘மட்கா’!
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மோகன் செருக்குறி, விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ‘பலாசா’ கருணா குமார் . இதில் வருண்தேஜுடன் நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.. பலாசா’ கருணா குமார் இயக்கவுள்ள,இப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் மாருதி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து, முதல் ஷாட்டின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த முதல் காட்சியை தில் ராஜு இயக்கினார். டைட்டில் போஸ்டரை ஹரிஷ் ஷங்கர் வெளியிட்டார்.இப்படத்துக்கு ‘மட்கா’ என தலைப்பிடப்பட்டுள்ளது
மட்கா என்பது சூதாட்டத்தின் ஒரு வடிவம். 1958-1982 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைசாக் நகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
24 வருடங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், 1958ல் இருந்து 82 ஆம் ஆண்டு காலகட்டம் என வருண் தேஜ் நான்கு விதமான கெட்-அப்களில் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக 60 களில் இருந்த வைசாக் நகரை சித்தரிக்கும் பிரமாண்டமான விண்டேஜ் செட் படத்திற்காக அமைக்கப்படவுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரியாசேத் கவனிக்க, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.