“சந்திரமுகி 2” கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

 கடந்த  2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்ற படம், ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கிய இப்படத்தில்,  ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர்.தற்போது அதன் தொடர்ச்சியாக 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 திரைப்படத்தை பி. வாசு இயக்கியுள்ளார்.

இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா,வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

 ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய கதாபாத்திரமான  ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில்  வெளியிட்டது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் சந்திரமுகி தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

திகில் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி கே எம் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.