மது பழக்கத்தால்….வருத்தம் தெரிவித்த வனிதா விஜயகுமார்!
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.
இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இவ்விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “ ‘லோக்கல் சரக்கு’ படத்தை தயாரித்த ராஜேஷ், நல்ல தயாரிப்பாளர்.. அவருடைய ’கடைசி தோட்டா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நான் இன்று தான் தெரிந்துக்கொண்டேன். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நன்றாக இருந்தது. படத்தின் டிரைலர் பார்க்கும் போது, சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’, ‘குட் நைட்’, ‘டாடா’ போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் போல் இருக்கிறது. இந்த வெற்றி அனைத்து படங்களுக்கும் கிடைப்பதில்லை. காரணம், படத்தில் நடித்தவர்கள் சரியாக ஒத்துழைப்பதில்லை.