90 வயது இந்தியன் தாத்தா: ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 போஸ்டர்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் சேனாபதி மற்றும் சந்துருவாக நடித்த வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது.
இப்படத்தில் ஊழல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக காட்சியளிக்கும் 70 வயது சேனாபதி என்ற இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் ப்ராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடித்து,இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியன் தாத்தாவாக அதிலும் 90 வயது இந்தியன் தாத்தாவாக கமல் நடித்துள்ளார்.
இந்நிலையில்,உலக நாயகன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுளார் இது கமல் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.