ஜார்க்கண்ட் ஆளுநருடன் ரஜினிகாந்த் ‘திடீர்’ சந்திப்பு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, நடைகள் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் ஒரு வார கால ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார்

அங்கு ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கும் . பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று தியானமும் மேற்கொண்டார்.

இந்நிலையில், இமயமலை பயணத்தை முடித்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை திரும்பும் வழியில், ,ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குச் சென்று. அங்குள்ள யோகதா சத்சங் தலைமையக சன்னியாசிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்

பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து உ.பி. மாநிலம் லக்னோ செல்லும் அவர், நாளை அங்கிருந்து சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.