ராமர் கோவில் ஒரு வரலாறு! நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!
கடந்த 9ம் தேதி தன்னுடைய ஆன்மீக பயணத்தை தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார்.;
ரஜினிகாந்த் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சோசியல் மீடியாவில் விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.,
ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடத்தை நேற்று, நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘சின்னமஸ்தா தேவியை வழிபடுவது நீண்ட நாள் கனவு’ என்றும், அந்த கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது; இனி வருடாவருடம் இங்கு வருவேன்” என்றும் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் ராமர் கட்டப்படுவது குறித்தான உங்கள் பார்வை என்ன என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, ” வரலாறு” என்று பதிலளித்தார். மேலும் “கோயில் திறந்த பிறகு அது எப்படி மாற்றப்படும் என்று பாருங்கள்” என்று பதிலளித்தார்.