‘தலைவர் 170’ பட பூஜை! புதிய அப்டேட் !!
ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுன்ட்டருக்கு எதிரான இஸ்லாமிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படத்தின் பூஜை வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
தற்போது இப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடத்தப்பட உள்ளதாகவும், அதை தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 19ம் தேதி இப்படத்தின்படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.