“ரெட் அண்ட் ஃபாலோ” படப்பிடிப்பு நிறைவு!
எம் ஆர் புரொடக்சன் மற்றும் வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ரெட் அண்ட் ஃபாலோ”. வணக்கம் தமிழா சாதிக் இந்தப்படத்தை இயக்கியுள்ளதுடன் இசையும் அமைத்துள்ளார்.
கருணாகரன், பாலசரவணன், யாஷிகா ஆனந்த், GP முத்து, அனிதா சம்பத், அஜய் வாண்டையார், ராபர்ட் மாஸ்டர், vj பப்பு, பயில்வான் ரங்கநாதன், நிஷாந்த் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர் ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதையை ‘ஜீவி’ புகழ் பாபு தமிழ் எழுதியுள்ளார். பாடல்களை கவிஞர் எம். சக்திவேல் எழுதியுள்ளார்.
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அபிராமி வீரமணி, மற்றும் சுரேஷ் K ராஜா ஆகியோர் இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து தயாரித்துள்ளனர்.. மேலும் பிக் பாஸ் பிரபலங்கள் 5 பேர் இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.