4 மொழிகள், 24 வித்தியாசமான ட்யூன்களுடன் உருவாகும் ‘சிகாடா’!!

இருக்கை நுனியில் அமரவைக்கும் போராட்ட த்ரில்லரான ‘சிகாடா’ தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

தனக்கான சிறப்பான இடத்தை செதுக்கிக்கொண்ட இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் அடியெடுத்து வைக்கும் முதல் படம் இது.

அதுமட்டுமல்ல முதன்முறையாக நான்கு மொழிகளுக்கும் புதிதான பாடல்களுடன் ‘சிகாடா’வை மேலும் மெருகேற்றும் விதமாக ஒரே டைட்டில், ஒரே கதை, 4 வெவ்வேறு மொழிகள், 24 வித்தியாசமான ட்யூன்களை உருவாக்கிய முதல் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் ‘சிகாடா’வின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளதுடன் படக்குழுவினரை பாராட்டி கலந்துரையாடியுள்ளார் .

வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இருவரும் தீர்னா பிலிம்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர் இப்படத்தில் ரஜித் CR, ஜாய்ஸ் ஜோஸ், காயத்ரி மயூரா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் இப்படம் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது.