வெறும் 6 கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் திரில்லர் திரைப்படம்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2018ம் ஆண்டில் -ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், ராட்சசன்.இதில், விஷ்ணு விஷால், அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்நிலையில் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது.
காதலை அடிப்படையாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடர்ந்து 20 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் மொத்தமாகவே வெறும் 6 கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடைக்கானல் பிண்ணனியில் திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் இப்படம் குறித்த மற்ற விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது