சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ !
தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இதில், சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி , தீப்ஸ், உமா பத்மநாபன், வினோத், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வரிசையில், ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது.இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.இதில் சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லா வும், சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா சவுத்ரியும் நடித்துள்ளனர்.
கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், புகழ், பாவெல் வித்தியாசமான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விரைவில் பட வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.இப்படத்தின் ஒளிப்பதிவை கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ கவனிக்க,,
எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.