தமிழகம் முழுவதும் ‘மினி கிளினிக்’! விஜய் மக்கள் இயக்கம் அதிரடி!!
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தனது மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்திற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார் என்று பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 84 பயிலகங்கள் வரை திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக புதுச்சேரியில் பயிலகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் அணி, ஐடி விங் அணி,மகளீர் அணி என்று விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் நடந்த மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெறும் எனவும், மகளிர் அணியைச் சிறப்பாகக் கட்டமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.நடிகர் விஜய், இதையடுத்து மக்கள் இயக்கத்தின் அனைத்து அணியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து விஜய் நேரடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது., இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மருத்துவர் அணியை உருவாக்க மின்னஞ்சல் சுற்றறிக்கை மூலம்,அதன் மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த மின்னஞ்சலில்,”தளபதியின் உறவுகளே, தளபதி யின் சொல்லுக்கிணங்க…மாவட்ட தலைவர்களாகிய தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள (மருத்துவர் அணி) அதாவது மக்கள் இயக்கத்தின் மேல் அக்கறையும், ஆர்வமும் உள்ள மருத்துவர்களின் விவரங்களை வருகின்ற (23.09.2023) சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்குள் இத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்வதுடன் அவர்களின் தெளிவான புகைப்படத்தையும் அதில் அப்லோட் செய்து சப்மிட் கொடுத்து உறுதி செய்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..என குறிப்பிடப்பட்டுள்ளார் .
.இதையடுத்து வழக்கறிஞர் அணி தொழில் நுட்ப அணி மகளிர் அணியை தொடர்ந்து விரைவில் மருத்துவர் அணிக்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் விஜய் பயிலகம்,விஜய் சட்ட உதவி மையம் போன்று தமிழகம் முழுவதிலும் விஜய் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை விஜய் அறிவிப்பார் என்கிறார்கள்.
இந்நிலையில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரை சென்று பார்த்ததன் மூலம் இருவருக்குமிடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் விஜய் சுற்றி சில தீய சக்திகள் உள்ளது என கடுமையாக எஸ்.ஏ.சியால் விமர்சிக்கப்பட்ட விஜய்யை தனது பிடிக்குள் வைத்திருப்பதாக கூறப்படும் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் எஸ்.ஏ.சியை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து விட்டு வந்துள்ளார்.