சூரியுடன் மீண்டும் இணைந்த விமல் !

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்  நிறுவனம் சார்பில், இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும்புதிய படம்,  ‘படவா’ இப்படத்தின் மூலம்  நீண்ட நாட்களுக்கு பிறகு  விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ளனர்.

இதில்,ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் உள்பட இதில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில்,படவா படக்குழுவினருடன் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.இயக்குனர் பேரரசு  தயாரிப்பாளர்கள் சங்க‌ செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இப்படம் குறித்து இசையமைப்பாளரும் படத்தயாரிப்பாளருமான ஜான் பீட்டர் கூறியதாவது, ”  ஊருக்குள்  வேலை வெட்டி இல்லாமல் ஊருக்குள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும்  இரண்டு இளைஞர்கள் அந்த ஊருக்குள் செய்யும் குறும்புகளால் வெறுத்து போன அவ்வூர் மக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து பணம் வசூலித்து இருவரில் ஒருவரை பிரித்து மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்.

ஆனால் அங்கு 3 மாதத்தில்  வேலை போய் விடுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்கு போன ஹீரோ,  பெரும் பணத்துடன் ஊர் திரும்புவதாக அவனது நண்பன் ஊருக்குள்  சொல்ல, ஹீரோவை வரவேற்க ஊரே திரள்கிறது இதையடுத்து  அங்கு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் ஜாலியான நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. விமல் – சூரி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும்.  இப்படத்தின் படப்பிடிப்பு காளையார் கோவிலில் 40 நாட்களும் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் 15 நாட்களும் நடத்தப்பட்டுள்ளது என்கிறார்.