நடிகர் விஷால்,எஸ்.ஜெ.சூர்யா உள்ளிடவர்களின் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி . டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. . இதுவரை வெளியான விஷால் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
மார்க ஆண்டனி படம், உலகளவில் 12 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக்வும், கர்நாடகா மற்றும் இதர மாநிலங்களில் 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதில், எஸ்.ஜே. சூர்யா, விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களால் துவண்டு இருந்த விஷால், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார்.