ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘ விஷால் 34 ‘ என பெயரிடப்பட்டுள்ளது . இப்படத்தின் மூலம் காமெடி நடிகர் யோகி பாபு விஷாலுடன் 5 வது முறையாக இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு காரில் விஷாலுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன தீவிர முருக பக்தரான யோகிபாபு ஒரு கடைக்கு சென்று முருகன் சிலையை வாங்கி விஷாலுக்கு பரிசாக அளித்துள்ளார்.
இப்புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு,அதில், காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது அற்புதமான முருகன் சிலையை எனக்கு பரிசளித்த சகோதரன் யோகிபாபுவுக்கு நன்றி .
முருகன் சிலையை வாங்கி அவர் எனக்கு பரிசளித்தது, கடவுள் அனுப்பியது. லவ் யூ டார்லிங். நன்றி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.