கடந்த 2017ம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம்,நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில்,அப்படியே முடங்கிப்போனது.
இதனிடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டில் இப்படத்தை கையகப்படுத்திய கவுதம் மேனன், சில மாற்றங்களோடு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி முடித்தார்.
இப்படம் தற்போது நவம்பர் மாத வெளியீட்டுக்கு தயாரான நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கவுதம்மேனன் , “துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பாளராக மாறியதால், இப்படத்தின் வெளியீட்டுக்காகவே தான் நடிகராக களமிறங்கியதாகவும் ,
மற்றபடி நடிப்பில் தனக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றும் நடிப்பின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை இப்படத்தின் வெளியீட்டுக்காக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் யாரிடமும் பட வாய்ப்புக்காக நிற்கவில்லை தன்னை தேடி வந்த வாய்ப்புகளை மட்டுமே நன்றாக பயன்படுத்திக் கொண்டேன் அதே சமயம் தனக்கு ஒத்துவராத கதாபாத்திரம் என தோன்றிய படங்களை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்