மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பான் இந்திய திரைப்படமாகும். . இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.‌ காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகும். அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.‌

இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா- பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் வருண் மாத்தூர், சௌரவ் மிஸ்ரா, ஏக்தா ஆர் கபூர், சோபா கபூர், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா, அபிஷேக் வியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.