கமலின் ‘234 வது’ படத்தில் நயன்தாரா?

நாயகன் படத்திற்கு பின் கமல் மீண்டும் தனது 234 வது படத்திற்காக இயக்குனர் மணி ரத்னத்துடன் இணைந்துள்ளார் இப்படத்தை ராஜ் கமல்பட நிறுவனம் , ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில்,இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. வரும் நவம்பர்7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளில் இந்த ப்ரோமோ டீசர் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிதம் இயக்குனர் தரப்பு பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாம்.