ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கதையின் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணபூரணி’திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
நயன்தாராவின் 75வது படமாக உருவாகியுள்ள ‘அன்னபூரணி திரைப்படத்தில், ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.என தெரிகிறது.