பாலிவுட்டில் ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ ஆகிய பாலிவுட் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள புதிய படம் ‘டன்கி’..
இதில், ‘பதான்’, ‘ஜவான்’ படங்களை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் இப்படத்தில், டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கான் நடுத்தர குடும்பத்து இளைஞனாகநடித்துள்ளார்.இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை,
ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.












