தீபாவளியை தொடர்ந்து பொங்கலுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!

இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான ரெய்டு, காளி வெங்கட், பூ ராமு நடித்துள்ள கிடா ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இதில், ஜப்பான் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் அடுத்தஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள படங்களின் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள லால் சலாம், தனுஷ் நடிபில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்கிறார்கள்
.இதில் லால் சலாமுக்கு கடும் போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் அமையும் என்கிறார்கள்.