நடிகை வனிதா மீது கொடூர தாக்குதல்! பிரதீப் ஆதரவாளர் தாக்கினாரா?
நடிகை வனிதா விஜயகுமார் மீது பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என கூறப்படும் மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முகத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதில் அவர் கூறியுள்ளதாவது,” ‘ நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே.என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன்.அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நபர், ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறீங்களா?’ என கேட்டார். அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றீயா என சொல்லிவிட்டு என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது என் அருகில் யாரும் இல்லை என பதிவிட்டுள்ளார்.இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளில் சவாலான போட்டியாளராக விளங்கினார். ஆனால் இடையில் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது. பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார்.
அவருக்கு ஆதரவாக நடிகை வனிதா, பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.இதில், ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை வனிதா, நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.