விஜயகாந்த் உடல் நிலை குறித்து அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமார் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறியுள்ளதாவது,”தேமுதிக தலைவரும், நெருங்கிய நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் பலமுறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, உடனடியாக திரும்பி இருக்கிறார்கள். ஆனால், கடந்த 18ந்தேதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் அவர்கள் நலம் பெற்று திரும்புவார் என்றிருந்த போது, அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையின்றி, நுரையீரல் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மக்கள் நலனுக்காக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்ட அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பலனளித்து, விரைவில் பூரண நலத்துடன் இல்லம் திரும்ப நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரார்த்திப்போம்.இவ்வாறு அவர் உருக்கமுடன் கூறியுள்ளார்