கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் பல பஞ்சாயத்துகளை கடந்து எப்படியும் வெளியாகி விடும் என்ற நம்பிக்கையில் விக்ரமின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்,விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான்: படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தியத்திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இதில்,பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் 2024 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில்
ஆஸ்கருக்கு அனுப்பக்கூடிய தகுதி இந்தப் படத்துக்கு இருக்கிறது. அதற்கான வேலைகள் இப்போது போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இப்போது 6 படங்களின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு எனக்கு 30 கோடி ரூபாய் தேவை. அதாவது ஒரு நாளுக்கு எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். ஆனால் அதை நான் என்ஜாய் செய்துகொண்டிருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்