மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளக்காடாக மாறியிருந்தது. 24 மணி நேரத்துக்கும் மேலாக விடாமல் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் உச்சக்கட்ட அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் தனது வீட்டை மழை நீர் சூழ்ந்துவிட்டதாகவும் உதவி செய்யுமாறும் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அதனையடுத்து தமிழக தீயணைப்பு வீரர்கள் சென்று விஷ்ணு விஷாலையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவத்துக்காக தங்கியிருந்த பாலிவுட் ஹீரோ அமீர்கானையும் சென்று மீட்டு வந்தனர்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார்.மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்” என பதிவிட்டுள்ளார். இப் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது