‘விஜய் 68’ பட டைட்டில்: அர்ச்சனா கல்பாத்தி பரபரப்பு தகவல் !

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில்,இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்திற்கு ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இப்பதிவை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது.‘தளபதி 68’ படத்தின் அப்டேட்டுக்களை பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி, தயவு செய்து நிதானமாக இருங்கள். உண்மையான டைட்டிலை வெங்கட் பிரபு விசேஷமாக அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் நிச்சயமாக ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ அல்ல’ என தெரிவித்துள்ளார்..

தற்போது,இந்த படத்தில்,’காபி வித் காதல்’ படத்தில் நடித்த மாளவிகா சர்மா இணைந்துள்ளார் என்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்