‘தங்கலான்’ வெளியீட்டில் ‘திடீர்’ மாற்றம்!
நடிகர் விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்க லான் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.இதில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
Related Posts
இப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.இப்படம் வரும் ஜனவரி 26 -ல் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால், இந்த படத்தின் வெளியீட்டு தேதி புனித வெள்ளி விடுமுறையையொட்டி தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருவதையொட்டி வரும் மார்ச் 29 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம்,வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது .