ஆஹா தமிழ். ஒடிடி தளத்துக்குகாக தற்போது ‘செவப்பி’ என்றபடத்தை . ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.ஃபீல் குட்படமாக உருவாகியுள்ள இப்படத்தை எம். எஸ். ராஜா எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.
1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான். பாசப்பிணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் “செவப்பி”யின் கதை.
கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில், பல கிராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளது ‘செவப்பி’.இப்படம்,ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 12, 2024 அன்று பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.