நடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் முறிவுக்கு பின்னர், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில், ஒரு வழியாக, கடந்த 2022 ஜூன் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அடுத்த 4 மாதத்தில் நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் , இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து அம்மாவானார்.
அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் சூட்டி இருவரும் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.திருமணத்திற்கு முன்னர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை அவ்வவப்போது இணையத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது மகன்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சேர்ந்து நயன்தாராதனது அம்மாவுடனும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார் இவர்கள் அனைவரும் சேர்து குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.