நேற்று இரவு 10.30 மணியளவில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் தேமுதிக அலுவலகம் வந்தார். விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் போலீஸார், பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் அப்போது சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர்.அவர்களை ஒரு வழியாக சமாளித்து,விஜயயை கார் அருகே கொண்டு வந்து விட்டனர் அப்போது எங்கிருந்தோ இரண்டு செருப்புகள் அடுத்தடுத்து விஜய்யை நோக்கி பறந்து வந்தன. ஆனால் அவை விஜய்யின் மீது படவில்லை. ஒரு செருப்பை விஜய்யின் அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கைகளால் பிடித்து வந்த திசையில் தூக்கி வீசினார்.. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில்,இச்சமபவத்தை பலரும் கடுமையாக கண்டித்துள்ளனர். இச்சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மீது செருப்பு வீச்சு
-செய்தி
காலம் முன்பு போல் இல்லை விஜய் அவர்களே!
அவரவர் வினைக்கான பலனை அவரவர் அந்தந்த காலத்திலேயே அனுபவிக்க வேண்டும்
அதில் யாரும் விதிவிலக்கு இல்லை#வெளியே_போ pic.twitter.com/vbecx1dznw
— நான் செந்தில் (@ItzSenthil_1991) December 29, 2023