நடிகர் விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை,ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இப்படத்தில் விஜயுடன்,பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி அல்லது பிப்ரவரியில் முடியும் என்கிறார்கள்இந்தப் படத்தில் விஜய் தந்தை மற்றும் மகன் கேரக்டர்களில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது..
இந்நிலையில் ,இப்படத்தின் டைட்டில் G.O.A.T என்று வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,புத்தாண்டையொட்டி இப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்றதலைபடப்பட்டு விஜய் இரட்டை வேடங்களில் தோன்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது
.கடந்த 1971ம் ஆண்டு கட்டுக் கட்டாக பணத்தை திருடி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த டி.பி. கூப்பர் அதன் பின்னர் எங்கே போனார் என்னவானார் என்பதை . இதுவரை அமெரிக்காவின் எப்பிஐயால் கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கின்றனர். அப்படிப்பட்ட நபரின் கதையை கருவாக கொண்டு இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் வெங்கட் பிரபு படமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.