கலைஞர் நூற்றாண்டு விழாவில் திரண்ட திரையுலக நட்சத்திரங்கள்!
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் ‘கலைஞர் 100’ நிகழ்வு தொடங்கியது.இந்நிகழ்வில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், கார்த்தி, சூர்யா, தனுஷ், சிவராஜ்குமார், உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அமைச்சர் ரோஜாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். 5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடந்தது.