வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமாரின் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில்,நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்க, நாயகியாக உபாசனா ஆர்.சி நடித்துள்ளார்.
இவர்களுடன் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாத வராக இருந்தால், அந்த குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதியவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குடும்ப கதையை காமெடியாக சொல்லியிருந்தாலும், பெண்கள் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லும் இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.’இப்படத்தின் ஒளிப்பதிவை கே.எஸ்.பழனி கவனிக்க, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்