முத்தமழை பொழியும் சித்தார்த்! வைரலாகும் வீடியோ!!
காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்ழும் நடிகர் சித்தார்த் முதலில் சமந்தா வுடன் கிசுகிசுக்கப்பட்ட வர் தற்போது நடிகை அதிதிராவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார் ஆனால் இது குறித்து பல இடங்களில் ஜோடியாக காணப்படும் இருவரும் தாங்கள் காதலிக்கிறோமா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த பதிலும்தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்
இந்நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்” என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சித்தார்த் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.