நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து விஜயின் 69 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும்,கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும்
இப்படத்தை சன் டிவி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கல் வெளியானது. ஆனால் தற்போது இக்கூட்டணியில் மாற்றம் செய்துள்ளாராம் நடிகர் விஜய். .’பீஸ்ட்’ படத்துக்குப் பின்னர் அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் விஜய் முழு மூச்சாக இயங்கி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் பேனரில் விஜய் நடித்தால் அது சரியாக இருக்காது என அவருக்கு சிலர் அட்வை செய்ய,விஜயும் அதற்கு செவி சாய்த்து,சன் நிறுவனத்திற்கு பதில், தளபதி 69 படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க பச்சை கொடி காட்டி விட்டாராம். இதையடுத்து வேல்ஸ் நிறுவனமும் பட்ஜெட் ஒரு பிரச்சனையே அல்ல, எங்களுக்கு படம் பண்ணி கொடுத்தால் போதும் என மகிழ்ச்சியுடன் டபுள் ஓ.கே சொல்லி விட்டனராம்/