சூப்பர்நேச்சுரல் த்ரில்லராக உருவாகும், ’நிலா வரும் வேளை’!
நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.’லட்சுமி’, ’மாறா’ மற்றும் ’டிரிகர்’ போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வழங்கிய ஸ்ருதி நல்லப்பாவின் மிராக்கிள் மூவிஸ்இப்படத்தை தயாரிக்கிறது.
’நிலா வரும் வேளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிப் படமாக உருவாகிறது.இதில் காளிதாஸ்ஜெயராம் நாயகனாகவும், தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற ஃபீல் குட் ரொமாண்டிக் படத்தை இயக்கிய ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா கூறுகையில்,, ‘நிலா வரும் வேளை’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். படத்திற்கான லொகேஷன், செட் வேலைகள், பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்பட ஆர்வலர்களை வசீகரிக்கும்” என்கிறார்.