ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தணிக்கை குழு அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,.