ராயன் பட ஒளிப்பதிவாளராக களமிறங்கும் தனுஷ் மகன்?
கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் ‘பர்ஸ்ட்லுக்’ போஸ்டர்கள் வெளியாகின.இந்நிலையில், ‘ராயன்’ படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை ஒரு சிறய கதாபாத்திரத்தில் தனுஷ் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவரே இப்படத்தின் ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.