சென்னை விமான நிலையத்தில் பாடகர் வேல்முருகன் அங்கிருந்த மத்திய பாதுகாப்புபடை சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அதாவது,இவர் விமானத்தில் திருச்சி செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தவரிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு சோதனை செய்துள்ளனர், அப்போது வேல்முருகன் குடித்திருப்பது தெரிய வந்துள்ளது.இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் அறிவிக்க அவர் விமானத்தில் பயணம் செய்யவும் மறுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஆத்திரமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.இறுதியில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாதால் வேறொரு விமானத்தில் அவரை திருச்சி அனுப்பி வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் அவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.