விஜய்க்காக உருவான கதையில் சிவகார்த்திகேயன் !

அயலான்’ படத்தை தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உருவாகி வரும்  அமரன் படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன்  ராணுவ வீரர் மற்றும் குடும்பத் தலைவன் என இரு வேறு கெட்டபுகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்உருவாகும்  ‘ஏகே23’ படத்துக்காக வரும் ஏப்ரல் மாதத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.விஜய்க்காக  துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதன் திரைக்கதை சிவகார்திகேயனுக்காக கதையில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் இயக்குனர்  இதில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக  நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் அடுத்தடுத்து உருவாக உள்ள புதிய திரைப்படங்கள் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்,தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏழு மில்லியன் ஃபாலோயர்களை தாண்டியுள்ளதாக மகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார். இதையொட்டி தனது  மாஸ் தோற்றத்திலான  புகைப்படங்களையும் அதில் வெளியிட்டு ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளார்.