மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்தயாரிப்பில்,அசோக் தேஜா இயக்கத்தில், நடிகை தமன்னா கதையின் நாயகியாக நடித்து வரும் புதிய படம் ’ஒடேலா 2’ பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் தமன்னாவுடன் ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ’
ஒடேலா 2’ கதை ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது. அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சுற்றி இதன் கதை உருவாகியுள்ளது.இந்நிலையில்,மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவசக்தியாக தமன்னா இடம்பெற்றிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இதில் தமன்னா,அடர்ந்த முடிகளுடன் நாக சாதுவைப் போல உடையணிந்து, ஒரு கையில் தடியும், மற்றொரு கையில் உடுக்கையையும் ஏந்தி, நெற்றியில் மஞ்சள் பொட்டு, குங்குமத்துடன் சிவசக்தியாக தோற்றமளிக்கிறார்.சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் இதன் கலை இயக்குநர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கானக் கதையாக இந்தப் படம் உள்ளதால் தேசிய அளவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.