நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் உறுப்பினர் ஆனார் !

‘நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இக்கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகள் தற்போது மிக மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இன்று மாலை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் நேற்ரூ
மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயத்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளர் வி. சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ. விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல். பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக்கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார் இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியின் அறிமுகம் இன்று மாலை நடந்தது, மகளிர் தினம், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி அலுவலகத்தில் செயலியை அறிமுகம் செய்து கட்சியின் முதல் உறுப்பினராக நடிகர் விஜய் இணைந்துளார் .