‘டியர் ‘படத்தில் ‘லைவ் சவுண்ட்.!’ நடிகை ரோகிணி புகழாரம் !

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி . பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…நடிகை நந்தினி ,நடிகர் அப்துல் லீ ஆகியோருக்குப் பிறகு நடிகை ரோகிணி பேசினார் . பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டுகிறவர். சிறந்த பண்பாளர். இவர் பேசுகையில் “விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள், அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.”என்றார்.
அடுத்து நடிகை கீதா கைலாசம் ,பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ,கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் ,ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் ,நடிகர் இளவரசு ,தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி ,இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் ,நடிகர் ஜீவி பிரகாஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் பேசினர்.