ஆர் . எம். வீரப்பன் இயற்கை எய்தினார். அமரர் எம். ஜி. ஆரின் ஆலோசகர் !!

பிறந்தவர் பின்னாளில் இறப்பார் என்பது நியதி. எவரும் இதற்கு விதி விலக்கல்ல .
மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆரின் ஆலோசகராக ,திரைப்பட நிர்வாகியாக ,தயாரிப்பாளராக, வாழ்ந்து தற்போது 97 ஆவது அகவையில் இறந்து விட்டார் .தமிழகத்தின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அண்மைக் காலமாக உடல் நலமில்லாமல் இருந்த மூச்சு விட சிரமப்படுவதாக அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பத்திருந்தார். இன்று பிற்பகல் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா முரசம் அஞ்சலி செலுத்துகிறது .