பிரியா மணியிடம் போனிகபூர் ‘அப்படி’ நடந்தாரா? வெடித்தது சர்ச்சை!
இந்தியில்,’ஜவான்’ மற்றும் ‘நேரு’ உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து நடிகை பிரியாமணி ‘மைடான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அஜய் தேவ்கன்கதாநாயகனாக நடித்துள்ளார் திருக்கிறார். அமித் ஷர்மா இயக்கியுளார். ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்
. இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகஉள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் மும்பையில் நடந்தது. இந்நிகழ்வில் போனி கபூர், ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ப்ரியாமணி கறுப்பு நிற சேலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது போனி கபூர் ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் போனிகபூரை வறுத்து எடுத்து வருகின்றனர் மேலும் போனிகபூர் அப்படி நடந்து கொண்டதை ப்ரியாமணி கொஞ்சமும் ரசிக்கவில்லை என்பது வீடியோவில் பிரியாமணியின் முக பாவங்களில் இருந்தே தெளிவாக தெரிகிறது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். .இவ்விவகாரம் மும்பையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.