சீயான் விக்ரம். நடிப்பில்,பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான்’ விரைவில் வெளியாகவுள்ளது இந்நிலையில்,சீயான் விக்ரம் பிறந்த நாளில் இப்படத்தின் மேக்கிங் கிளிம்பஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.இது விக்ரம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் .62 என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில், இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மளிகை கடையில் சியான் விக்ரம் பொட்டலம் போட்டுக் கொண்டு இருக்கும் கடைக்காரராக இருக்கிறார். அவரை ஒரு கும்பல் போட்டுத் தள்ள ஆயுதங்களுடன் வருகின்றனர். கடைசியில் வேலை பார்த்துக் கொண்டே துப்பாக்கியை ரெடி செய்து கொல்ல வரும் ஆட்களில் ஒருத்தனை சுடவும் அனைவரும் தெறித்து ஓடும் காட்சியை தற்போது டைட்டில் அறிவிப்புடன் வெளியிட்டுள்ளனர்..இந்த டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரியா ஷிபு தயாரிக்க்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.