கமல்ஹாசன் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகடந்த சில தினங்களாக ஜெய்சல்மாரில் நடந்து வந்த நிலையில், தற்போது டெல்லியில்தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லியில் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து 20 நாட்கள் நடத்த இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.இப்படப்பிடிப்பில் சிம்பு,கவுதம் கார்த்திக், திரிஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.நாளை முதல் இந்த ஷெட்யூலில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்கவுள்ளார் என்கிறார்கள்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ள இப்படப்பிடிப்பில் 200க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர். வரும் நாட்களில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் இதில்,கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக வரும் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் ,சிம்புவுக்கு ஜோடி திரிஷா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்கும் என தெரிகிறது,