நடிகர் சங்க கட்டிடப் பணிக்கு ரூ.50 லட்சம் நிதி! நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்!!
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிக்காக நடிகர் சிவ கார்த்திகேயன் தனது சொந்த பணத்திலிருந்து ரூ. 50 லட்சம் நிதி கொடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.M.நாசர் மற்றும் பொருளாளர் திரு.SI.கார்த்தி அவர்களிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது”இவ்வாறு அதில் கூறியுள்ளார்