நடிகர் தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் முக்கியவேடத்தை ஏற்றுள்ள நடிகர் நாகார்ஜுனா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த
வீடியோவில் சோ வென மழை பெய்யும் அந்த நடு ராத்திரிநேரத்தில்,கட்டு கட்டாக ஏற்றப்பட்ட பணக்கட்டுகள் ஏற்றப்பட்டுள்ள லாரி அருகில் குடை பிடித்தபடி நடந்து வரும் நாகார்ஜுனா, கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் காணப்படுகிறது. இதில் நாகார்ஜுனா கண்ணாடி போட்டுக்கொண்டு சிறப்பான லுக்கிங் காணப்படுகிறார். படத்தில் அவரது கேரக்டர் வில்லன் என்று கூறப்பட்டுள்ள சூழலில் பணக்கட்டுகளுடன் அவர் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.இப்படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.