அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இந்த படப்பிடிப்பில் அஜித்தின் இண்ட்ரோ பாடல்,மற்றும் இரண்டு முக்கிய காட்சிகள், படமாக்கப்பட்டு வருவதாகவும் அடுத்ததாக ஒரு அதிரடி ஆக்சன் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளார் என்கிறார்கள். இதை அடுத்து இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் இருக்கும் என்றும் அதற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி இப்போதே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள் .